ADDED : நவ 19, 2024 06:41 AM
நெலமங்களா: பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகா கோலர்ஹட்டியைச் சேர்ந்தவர் காரியம்மா, 52. இவர் கால்நடைகள் வளர்த்து வந்தார். தனது வீட்டின் அருகே உள்ள வயல் பகுதியில் புல் வெட்டுவதற்கு சென்றுள்ளார். அப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால், கிராம மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இதையும் மீறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை புல் வெட்டி கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சிறுத்தை, அவர் மீது பாய்ந்தது. தலை, மார்பு என பாதி உடலை கடித்துக் குதறியது.
புல்வெட்ட சென்றவரை காணவில்லையே என அவ ரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது, சிறுத்தை தின்றது போக பாதி உடல் மட்டும் கிடந்ததை பார்த்து கதறினர். இச்சம்பவததால், கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தையை பிடிக்க 30 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கூண்டுகள் தயார் நிலையில் உள்ளன.

