ADDED : மார் 07, 2024 03:58 AM
சிக்கமகளூரு :உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதியில், ஜெயபிரகாஷ் ஹெக்டேவுக்கு சீட் கொடுக்க, காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளத்தில் 'கோ பேக் ஹெக்டே' என்ற கோஷம் டிரெண்டிங் செய்யப்படுகிறது.
உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில், பலரும் காங்கிரஸ் சீட் எதிர்பார்க்கின்றனர். இந்த தொகுதியில் ஜெயபிரகாஷ் ஹெக்டேவை களமிறக்க, காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஹெக்டேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கோ பேக் ஹெக்டே' என, பிரசாரத்தை சமூக வலைதளங்களில் துவக்கியுள்ளனர்.
'கஷ்ட காலத்தில் கட்சியை கைவிட்டவர்களுக்கு, சீட் கொடுக்கக் கூடாது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பளியுங்கள்' என, தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர்.
சிக்கமகளூரு, கொப்பா, சிருங்கேரி காங்., தொண்டர்கள், நேற்று முன்தினம் முதல்வரை சந்தித்து, 'ஜெயபிரகாஷ் ஹெக்டேவுக்கு சீட் கொடுக்கக் கூடாது' என, வேண்டுகோள் விடுத்தனர்.

