கடவுள் சத்தியமானவர்; மகன் இறுதிச்சடங்கில் கண்களில் நீர் வழிய முழங்கிய தாய்!
கடவுள் சத்தியமானவர்; மகன் இறுதிச்சடங்கில் கண்களில் நீர் வழிய முழங்கிய தாய்!
UPDATED : பிப் 13, 2025 02:13 PM
ADDED : பிப் 13, 2025 02:10 PM

ராஞ்சி: காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பில் மகனை பறிகொடுத்த தாய், உடல் அடக்கத்தின்போது, 'கடவுள் சத்தியமானவர்' என்று உரக்க முழங்கியது, அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.
ஜம்மு காஷ்மீர் அக்னுாரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், ராணுவத்தை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் கேப்டன் கரம்ஜித் பக்சியும் ஒருவர்.
அவரது உடல் இறுதிச்சடங்கு, சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது. மாநில கவர்னர் சந்தோஷ் குமார் கங்குவார் மற்றும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
அப்போது, கேப்டன் கரம்ஜித் பக்சியின் தாயார், கண்களில் நீர் வழிய சீக்கிய சம்பிரதாயப்படி, 'கடவுள் சத்தியமானவர்' என்று முழங்கினார்.அங்கிருந்த குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் கண்களில் நீர் வழிய திரும்பக் கூறினர். இதைக்கண்டு, இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அனைவரும் கண்ணீர் மல்கினர்.