sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கம் விலை சிறிது குறைந்தது

/

தங்கம் விலை சிறிது குறைந்தது

தங்கம் விலை சிறிது குறைந்தது

தங்கம் விலை சிறிது குறைந்தது


ADDED : ஆக 11, 2011 12:52 AM

Google News

ADDED : ஆக 11, 2011 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : கடந்த சில நாட்களாக, ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலையில், நேற்று சுணக்கம் கண்டது.

மும்பையை பொறுத்தமட்டில், ஏற்றம் இறக்கமின்றி இருந்தது. சென்øயையில், நேற்று காலையில், கிராமுக்கு, 27 ரூபாய் குறைந்திருந்தது. மாலையில், 11 ரூபாய் மட்டுமே குறைந்திருந்தது. அமெரிக்காவில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஏற்பட்டுள்ள தயக்கம் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பும் குறைவதால், தங்கத்தின் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் ஏறியது. அதே சமயம், பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது.



பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் துவங்குவதையொட்டி தங்கத்தின் விற்பனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று காலை, மும்பை மார்க்கெட்டில் ஆபரண தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமின்றி காணப்பட்டது. ஆனால், பங்குச்சந்தையில் நல்ல ஏற்றத்தை காண முடிந்தது. பங்குச்சந்தை குறைந்து இருக்கிறதே அதன் பக்கம் போகலாமா, பொறுத்திருப்போமா என பலரும் குழப்பத்தில் உள்ளனர். சர்வதேச நிலைமைகள் சரியாக இல்லாததால், தங்கத்தின் முதலீடு அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளதால், நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. அதே சமயம், தொடர்ந்து ஏறி வந்த வெள்ளியின் விலை, லாப நோக்கம் கருதி பலரும் விற்பதற்கு வரிசை கட்டி நிற்பதால், நேற்று மட்டும், மும்பை சந்தையில் வெள்ளி விலை கிலோவுக்கு, 225 ரூபாய் குறைந்தது. சென்னைøயில், நேற்று காலை ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு, 27 ரூபாய் குறைந்திருந்தது. ஆனால், மாலையில், 11 ரூபாய் மட்டுமே குறைந்து, கிராம், 2,434 ரூபாயாக இருந்தது.








      Dinamalar
      Follow us