
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 2047ம் ஆண்டுக்குள், நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பொன்னான வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி, நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
திரவுபதி முர்மு, ஜனாதிபதி
அக்கறையை காட்டுகிறது!
பிரதமர் மோடி அரசு, விவசாயிகளின் நலனுக்காக அயராது உழைக்கிறது. 'பி.எம்.கிசான்' திட்டத்தில் இதுவரை, 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, விவசாயிகள் மீதான அரசின் அக்கறையை காட்டுகிறது.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
நடவடிக்கை எடுப்பேன்!
தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பா.ஜ., தந்த அழுத்தத்தாலும், ராஜ்யசபா தேர்தலில், சமாஜ்வாதி எம்.எல்.ஏ.,க்களில் சிலர் கட்சி மாறி ஓட்டளித்து விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி

