உ.பி.,யில் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் 'குய்யோ முய்யோ'ன்னு கதறல்
உ.பி.,யில் 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் 'குய்யோ முய்யோ'ன்னு கதறல்
ADDED : செப் 03, 2024 11:38 AM

லக்னோ: தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வரும் அரசு ஊழியர்கள் 2.5 லட்சம் பேரின் சம்பளம் நிறுத்திவைக்கப்ட்டதால் உ.பி.,யில் பலர் அன்றாடம் பிழைப்பை ஓட்ட முடியாமல் கையை பிசைய துவங்கி உள்ளனர்.
சொத்தை காட்டுங்கப்பா ., சம்பளம் தர்றோம்
உ .பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது அரசு ஊழியர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், பொதுத்துறை அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என தங்களின் சொத்து விவரங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆசிரியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் , தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு இந்த பட்டியலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மனவ் சம்பத்தா என்ற போர்ட்லில் இதுவரை 71 சதவீதம் பேர் தங்களின் விவரங்களை தாக்கல் செய்துள்ளனர். பல முறை எச்சரித்தும் ஏனையோர் அரசு உத்தரவை மதிக்காமல் இருந்து வந்தனர். இதனையடுத்து சொத்து விவரம் தாக்கல் செய்யாத அரசு ஊழியர்கள் 2,44,565 பேரின் சம்பளத்தை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.