லஞ்சம் கொடுத்தால் தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது: கட்கரி
லஞ்சம் கொடுத்தால் தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது: கட்கரி
UPDATED : செப் 20, 2024 11:54 AM
ADDED : செப் 16, 2024 05:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனே : '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. ஆவணங்கள் வேகமாக நகர்கின்றன ,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புனே பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. நமது அமைப்பில் ஏராளமான விஞ்ஞானி நியூட்டனின் தந்தையர்கள் உள்ளனர். ஆவணங்கள் மேல் எடை( லஞ்சம்) வைத்தால் அது வேகமாக நகரும். நமது நாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிவு எடுக்கும் முறை கொண்டு வர வேண்டும். தற்போது நடப்பதில் இருந்து இளைஞர்கள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.