UPDATED : ஜன 16, 2024 05:11 PM
ADDED : ஜன 16, 2024 01:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கவர்னர் ரவி, தூய்மைப்பணியில் ஈடுபட்டார்.
கவர்னர் ரவி, மனைவி லட்சுமியுடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அவர்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் வரவேற்றார். தொடர்ந்து, சாமி மற்றும் அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிறகு, கோயிலின் கிழக்கு ரத வீதியில் சுத்தம் செய்யும் பணியில் கவர்னர் ரவி ஈடுபட்டார். கவர்னர் வருகையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.