ADDED : ஜன 17, 2025 07:15 AM
பல்லாரி: கர்நாடக கவர்னர் தாவர்சந்த கெலாட், இன்று பல்லாரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கவர்னர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
கவர்னர் தாவர்சந்த் கெலாட், நாளை (இன்று) பல்லாரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை (இன்று) மதியம் பெங்களூரின் ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்படுகிறார். 3:10 மணிக்கு பல்லாரியின் ஜிந்தால் விமான நிலையத்தில் வந்திறங்குவார்.
இங்கிருந்து 3:15 மணிக்கு புறப்பட்டு, மாலை 4:00 மணிக்கு, குருகோடுவின், தம்மூர் கிராமத்துக்கு வருவார். இங்கு நடக்கும் பிருந்தா நேஷனல் பப்ளிக் பள்ளி, பிருந்தா பி.யு., கல்லுாரி, பிருந்தா பட்டப்படிப்பு கல்லுாரி, ஸ்கந்தா இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங் கல்லுாரி ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
அதன்பின் மாலை 5:00 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு ஜிந்தால் விமான நிலையத்துக்கு வருவார். சிறப்பு விமானத்தில் பெங்களூரு திரும்புவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.