சர்க்கரை, எத்தனால் விலை; புதிய முடிவுக்கு தயாரானது மத்திய அரசு!
சர்க்கரை, எத்தனால் விலை; புதிய முடிவுக்கு தயாரானது மத்திய அரசு!
ADDED : செப் 27, 2024 07:50 AM

புதுடில்லி; சர்க்கரை மற்றும் எத்தனால் விலைகளை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது: 2024-25ம் ஆண்டுக்கான சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலை, எத்தனால் விலைகளை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது.
சர்க்கரையின் குறைந்தபட்ச விலை தற்போது கிலோவுக்கு ரூ.31 ஆக இருக்கிறது. 2019ம் ஆண்டு முதல் இதே நிலை தான் உள்ளது. 2022-23ல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் எத்தனால் விலையும் இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் சர்க்கரை ஏற்றுமதி 6.4 மில்லியன் டன்னாக இருந்தது.
இந்தாண்டின் அக்டோபர் முதல் செப்டம்பர் முதலான பருவத்தில் சர்க்கரை உற்பத்தி நன்றாகவே இருக்கிறது. தற்போது கரும்பு சாறில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் ஒரு லிட்டர் ரூ.65.61 ஆகவும், பி-ஹெவி, சி-ஹெவி மொலாசஸில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கான விலை முறையே லிட்டருக்கு ரூ.60.73 மற்றும் ரூ.56.28 ஆக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.