ADDED : டிச 14, 2024 04:11 AM

பெலகாவி: மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் தனஞ்செயா, அருண் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்களின் ஊதியத்தை கேரளா போன்று அதிகரிக்க முடியாது. ஊதியத்தை உயர்த்துவது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்; வேண்டுகோள்விடுப்போம்.
கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு, பென்ஷன், இலவச பஸ் பாஸ், மருத்துவ சிகிச்சை இன்சூரன்ஸ் வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை. இதுகுறித்து அரசிடம் கோரிக்கை விடுக்கப்படாது.
அதிகாரிகள், ஊழியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய, பஞ்சாயத்து ராஜ் துறை கமிஷனர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி ஆய்வறிக்கை அளிக்க, ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

