UPDATED : அக் 24, 2024 11:49 AM
ADDED : அக் 24, 2024 11:40 AM

புதுடில்லி: இயற்கை பேரிடர்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினரின் முயற்சிகள் மக்களிடையே மகத்தான பாராட்டை பெறுகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே 3,488 கி.மீ., நீளமுள்ள எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த படை, 1962ம் ஆண்டு அக்.,24ம் தேதி உருவாக்கப்பட்டது.
இது தொடர்பாக, பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் இன்று(அக்.,24) வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாக திகழ்கிறது. சில சவாலான பகுதிகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட கடினமான நேரத்தில் நம்மை பாதுகாக்கின்றனர். இயற்கை பேரிடர்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, இந்தோ திபெத் படையினரின் முயற்சிகள் மக்களிடையே மகத்தான பாராட்டைப் பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அந்தஸ்து
மற்றொரு சமூகவலைதளப் பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: பாலிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. செம்மொழி அந்தஸ்து வழங்கும் இந்திய அரசின் முடிவு புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

