ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: தமிழகத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி
ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: தமிழகத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி
UPDATED : செப் 01, 2024 07:53 PM
ADDED : செப் 01, 2024 05:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஆக., மாதம் ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆக., மாதம் வசூலான ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டியில்,
சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடி
எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி
ஐஜிஎஸ்டி ரூ.93,600 கோடி
செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது.
2023ம் ஆண்டு ஆக., மாதம் ரூ.1.59 லட்சம் கோடி வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்
தமிழகத்தில் 10,181 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். அப்போது 9,475 கோடி ரூபாய் வசூல் ஆனது.