sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் மாற்றமும் - தாக்கமும்!

/

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் மாற்றமும் - தாக்கமும்!

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் மாற்றமும் - தாக்கமும்!

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் மாற்றமும் - தாக்கமும்!

2


ADDED : அக் 19, 2025 03:49 AM

Google News

ADDED : அக் 19, 2025 03:49 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நான்கு அடுக்குகளில் இருந்து, இரண்டு அடுக்குகளாக செப்., 22ல் குறைக்கப்பட்டது. இந்த ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால் வர்த்தக துறையில் ஏற்பட்ட மாற்றம், பொதுமக்கள் அடைந்த பலன்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், டில்லியில் செய்தியாளர்களை நேற்று சந்தித்து விரிவாக விளக்கினர்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

மின்னணு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மின்னணு உற்பத்தி இப்போது இரட்டை இலக்கை அடைந்துள்ளது.

'டிவி' முதல் 'ஸ்மார்ட் போன்'கள் வரை ஒவ்வொரு பிரிவிலும் தேவை அதிகரித்துள்ளது. இதனால், மின்னணு பொருட்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இந்த துறை தற்போது, 25 லட்சம் பேரை நேரடியாக வேலைக்கு அமர்த்திஉள்ளது. ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் காரணமாக, இந்த ஆண்டு கூடுதலாக 20 லட்சம் கோ டி ரூபாய் மதிப்பில் மின்னணு பொருட்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த சீர்திருத்தங்கள் நடப்பு நிதியாண்டில், நுகர்வு மற்றும் முதலீட்டை கணிசமாக அதிகரிக்கும். இந்த புதிய பொருளாதாரம் ஒவ்வொரு நுகர்வோரின் வீட்டை அடைந்துள்ளது. சுதேசியின் உணர்வு முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையாகியுள்ளது.

இந்த ஆண்டு, அமெரிக்காவிற்கு ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா, தன் அண்டை நாடுகளை மிஞ்சியுள்ளது. இது, நம் நாட்டிற்கு ஒரு பெரிய சாதனை. ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தால், சில பெரிய நிறுவனங்களின் உற்பத்தியில், 20 சதவீதம் நம் நாட்டில் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வாயிலாக பிரதமர் மோடி அளித்த தீபாவளி பரிசு மக்களை சென்று சேர்ந்துள்ளது. நுகர்வோருக்கான பலன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 'கார், ஏசி, வாஷிங் மிஷின், டிவி' விற்பனை அதிகரித்துள்ளது.

'ஆட் டோ மொபைல்' துறையில் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செப்டம்பர் கடைசி ஒன்பது நாட்களில் மட்டும் பயணியர் வாகன விற்பனை, 3.7 2 லட்சமாக உயர்ந்து உள்ளது.

இருசக்கர வாகன விற் பனை, 21.60 லட்சமாக அதிகரித்துள்ளது. 'டிவி' விற்பனை, 30 - 35 சதவீதமாகவும், 'ஏசி' விற்பனை இரு மடங்காகவும் உயர்ந்துள்ளது. பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

நாடு முழுதும் டிராக்டர் விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளது. உள்நாட்டு பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. விலை மாற்றம் செய்யப்பட்ட, 54 பொருட்களின் நிலையை அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து, மக்களின் நலனை உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறிய தாவது:

நவராத்திரியின் முதல் எட்டு நாட்களில் மட்டும், 1.65 லட்சம் மாருதி கார்கள் விற்பனையாகின. 'மஹிந்திரா' நிறுவனத்தின் கார் விற்பனை, 50 சதவீதம் உயர்ந்துள்ளது. 50,000க்கும் மேற்பட்ட, 'டாடா' நிறுவன கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடைந்து வருகின்றனர். வியாபாரம் அதிகரித்துள்ள அதே நேரத்தில், சேமிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த சீர்திருத்தங்கள் பொருளாதாரத்திற்கு இரட்டை 'தமாக்கா' ஆகும். ஜி.எஸ்.டி., எளிமைப்படுத்துதல் மற்றும் தனிநபர் வருமான வரி நிவாரணம் இரண்டும் இதில் அடங்கும்.

தனிநபர் வருமான வரியில், 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஏற்கனவே நுகர்வோர் செலவினங்களில் பிரதிபலிக்கிறது. சர்வதேச நாணய நிதியம், நம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை, 6.6 சதவீதமாக திருத்தியுள்ளது.

வரி மாற்றத்தை தொடர்ந்து, நம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் உறுதியுடன் முன்னேறி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us