ADDED : ஜன 01, 2025 04:22 PM

புதுடில்லி: டிசம்பர் மாதத்திற்கான இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 7.3% அதிகமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி வருவாய் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி 2024 டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரப்படி, டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாயாக 1.77 லட்சம் கோடி ரூபாய் வந்துள்ளது.
இது முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.3 சதவீதம் அதிகம்.
கடந்தாண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்தது.
மத்திய ஜி.எஸ்.டி., வசூல் ரூ.32,836 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி., ரூ.40,499 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., ரூ.47,783 கோடியாகவும், கூடுதல் வரி ரூ.11,471 கோடியாகவும் வசூலாகியுள்ளன என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.