ADDED : டிச 19, 2025 10:28 PM

ஆமதாபாத்: குஜராத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முடிக்கப்பட்டுவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை போன்று குஜராத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்.,27 ல் துவங்கியது, முதல் கட்டமாக வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். எஸ்ஐஆர் கணக்கெடுப்புக்கு பின்னர் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.
இதன்படி குஜராத்தில் எஸ்ஐஆர் துவங்கப்படுவதற்கு முன்பு மொத்தம் 5,08,43,436 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணியைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 4,43,70,109 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்படி 73,73,327 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர்.
அதில்
இறந்தவர்களின் எண்ணிக்கை: 18,07,278
ஆய்வின் போது இல்லாதவர்கள்: 9,69,662
இடம்பெயர்ந்தவர்கள் :40,25,553
மற்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டவர்கள்: 1,89,364 பேர்
பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது ஆட்சேபனைகளை பிப்.,10 ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

