ADDED : ஏப் 15, 2025 06:49 PM
புதுடில்லி:சட்டவிரோதமாக துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் டீக் நகரைச் சேர்ந்தவர் ஆஸ் முகமது,45. இவர் மீது ஏற்கனவே, ஆயுதச் சட்டத்தின் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்றதாக எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி, புதுடில்லி மது விஹார் காந்தா நாலா அருகே, சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஆஸ் முகமது பிடிபட்டார். அவரிடம் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தன் கூட்டாளிகளான நஜர் மற்றும் ஷாகிர் ஆகியோருடன் சேர்ந்து, ராஜஸ்தானில் ஒரு மலைப் பகுதியில் துப்பாக்கிகள் தயாரித்து டில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முழுதும் விற்பனை செய்வதாக ஒப்புக் கொண்டார்.
முகமது இதற்கு முன், ராஜஸ்தானில் ஏழு முறையும், ஹரியானாவில் ஒரு முறையும் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார்.
டில்லி போலீசார் விசாரணைக்குப் பின், ஆஸ் முகமதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.