ADDED : ஏப் 09, 2025 11:06 PM
சண்டிகர்:பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'தேரா சச்சா சவுதா' தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு, 21 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஐந்தாவது முறையாக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவையடுத்து, ஹரியானா மாநிலம் ரோஹ்தக் நகரின் சுனாரியா சிறையிலிருந்து நேற்று காலை வெளியில் வந்த குர்மீத் ராம், சிர்சா நகரில் உள்ள தனது தேரா சச்சா தலைமை அலுவலகத்துக்குச் சென்றார் பரோல் காலம் முழுதும் சிர்சா நகரில் தங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், 30 நாள் பரோல் வழங்கப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 5 முறை இவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு தன் ஆசிரமத்தில் இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, குர்மீத் ரஹீமுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

