ஹமாஸ் தலைவர் படங்களுடன் பேனர்; கேரளா பள்ளிவாசல் விழாவில் சர்ச்சை
ஹமாஸ் தலைவர் படங்களுடன் பேனர்; கேரளா பள்ளிவாசல் விழாவில் சர்ச்சை
ADDED : பிப் 17, 2025 03:15 PM

பாலக்காடு: கேரளா பள்ளிவாசலில் ஹமாஸ் தலைவர்களின் படங்கள் பேனர்களில் வரையப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு: கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ளது திரிதலா. இங்குள்ள பள்ளி வாசலில் உரூஸ் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேனரில் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களான சின்வார் மற்றும் ஹனியே ஆகிய இருவரின் போட்டோக்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த பேனர்களை கைகளில் ஏந்திய சிலர், யானையின் மீதேறி அமர்ந்து ஊர்வலமாக வந்தனர்.
இந்த போட்டோக்களை இணையத்தில் சிலர் பதிவேற்ற சர்ச்சை வெடித்து இருக்கிறது. தீவிரவாத தலைவர்களின் படங்கள் எப்படி இடம்பெறலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருக்கின்றனர்.

