சுபான்ஷூ சுக்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
சுபான்ஷூ சுக்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
ADDED : ஜூலை 15, 2025 04:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோர் பத்திரமாக பூமிக்கு திரும்பியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விண்வெளிக்கான வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன்.
சர்வதேச விண்வெளி நிலையணத்தை பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, தன அர்ப்பணிப்பு, தைரியம் மூலம் 100 கோடி மக்களின் கனவுகளுக்கு முன்மாதிரியாக உள்ளார். இது, நமது சொந்த விண்வெளி பயணமான ககன்யானை ககன்யானை நோக்கிய மற்றொரு மைல்கல் ஆகும் எனத் தெரித்துள்ளார்.