ADDED : செப் 25, 2024 02:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குர்கான்: ஹரியானா சட்டசபை தேர்தலையொட்டி இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இம் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, அக்., 1ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மொத்தம் 90 இடங்களை கொண்ட ஹரியானா சட்டசபையில், 73 பொதுத் தொகுதிகளும், 17 தனித் தொகுதிகளும் உள்ளன.
இந்நிலையில் இன்று ஹரியானா வரும் பிரதமர் மோடி, சோனாபட், ஹிசார் உள்ளிட்ட இடங்களில் பேரணி, மற்றும் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.