UPDATED : மே 25, 2024 11:31 PM
ADDED : மே 25, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குர்கான்: ஹரியானா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ., ராகேஷ் தவுல்தாபாத், 45 மாரடைப்பால் காலமானார்.
ஹரியானாவில் பாட்ஷாபூர் சட்டசபை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வான இவருக்கு நெஞ்சுவலி ஏற்ப்டடதையடுத்து குர்கானில் உள்ள பாலம்விஹார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ராகேஷ் தவுல்தாபாத் மறைவுக்கு சக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

