மகாராஷ்டிரா தேர்தலை பாதிக்குமா ஹரியானா முடிவுகள்! காங். மாஜி முதல்வர் ஓபன் டாக்
மகாராஷ்டிரா தேர்தலை பாதிக்குமா ஹரியானா முடிவுகள்! காங். மாஜி முதல்வர் ஓபன் டாக்
ADDED : அக் 11, 2024 10:31 PM

ஜெய்ப்பூர்; ஹரியானா தேர்தல் முடிவுகள், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கூறி உள்ளார்.
ஹரியானா தேர்தல் முடிவுகள், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது;
ஹரியானா தேர்தல் முடிவுகள் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றன. தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் முடிவுகள் எப்படி மாறின என்பதை கண்டுபிடிப்பது முக்கியம்.
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். தேர்தலில் முதன்முறையாக இதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகி, முடிவுகள் தலைகீழாக மாறி உள்ளதை பார்க்கிறோம். தேர்தல் முடிவு வெளியான போது பல பா.ஜ., தலைவர்கள் காங்கிரஸ் வெற்றி பெறுகிறது என்று கூறினார்கள்.
தேர்தல் தோல்வி கட்சிக்குள் வெளிப்படையாகவே அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஹரியானாவில் நடக்கும் அதே நிகழ்வு மகாராஷ்டிராவில் நடக்கும் என்று சொல்லமுடியாது. அது வேறு, இது வேறு. அங்குள்ள ஆட்சி, மக்களின் முடிவு என்ன என்பதை பார்க்க வேண்டும். எனவே, இருமாநில தேர்தலையும் ஒன்றாக நாம் பார்க்க முடியாது.
இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.
முன்னதாக, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது.நவம்பர் 26ம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

