தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/‘அக்னிபத்’ திட்டம் திரும்ப பெறப்பட்டதா? முப்படை தளபதி ராஜா சுப்ரமணி விளக்கம்!

‘அக்னிபத்’ திட்டம் திரும்ப பெறப்பட்டதா? முப்படை தளபதி ராஜா சுப்ரமணி விளக்கம்!

‘அக்னிபத்’ திட்டம் திரும்ப பெறப்பட்டதா? முப்படை தளபதி ராஜா சுப்ரமணி விளக்கம்!


UPDATED : நவ 16, 2026 06:32 PM

ADDED : நவ 16, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 06:32 PM ADDED : நவ 16, 2026 06:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‘‘அக்னிபத் திட்டம் திரும்ப பெறப்படவில்லை. அதில் சில மாற்றங்களே செய்யப்பட்டன,’’ என, நம் முப்படைகளின் தலைமை தளபதி என்.எஸ்.ராஜா சுப்ரமணி விளக்கம் அளித்துள்ளார்.

நம் ராணுவம், விமானம் மற்றும் கடற்படையில் இளைஞர்களை பணியமர்த்தும் நோக்கில், 2022 செப்டம்பரில், அக்னிபத் திட்டத்தை மத்திய பா.ஜ., அரசு அமல்படுத்தியது. இதன்படி, 17.5 – 21 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் முப்படைகளில் நான்கு ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவர். இவர்கள், ‘அக்னி வீரர்’கள் என, அழைக்கப்படுகின்றனர். பணிக்காலத்தை நிறைவு செய்யும் அக்னி வீரர்களில், திறன் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில், 25 சதவீதம் பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுகின்றனர்.

தேர்வாகாத, 75 சதவீத பேர் பணியில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, வரி விலக்கு பெற்ற சேவை நிதி தொகுப்பு மற்றும் திறன் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்துக்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சமீபத்தில், அக்னிபத் திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்தது. அதாவது, பணிக்காலத்தை நிறைவு செய்து நிரந்தர பணியை பெறாத, 75 சதவீத அக்னி வீரர்களுக்கு மேலும் இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், நம் முப்படைகளின் தலைமை தளபதி என்.எஸ்.ராஜா சுப்ரமணி கூறியதாவது:

அக்னிபத் திட்டம் ஒருபோதும் திரும்ப பெறப்படவில்லை. இது பற்றி பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான்கு ஆண்டுகளுக்கு முன் அக்னிபத் திட்டத்தை தொடங்கிய போதே, இத்திட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறு ஆய்வு செய்யப்படும் என, தெரிவித்திருந்தோம். இது, மாற்ற முடியாத விதி அல்ல; எப்போதுமே ஆய்வுக்கு உட்பட்டது தான்.

முப்படைகளின் விரிவான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு பிறகே, அக்னிபத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் குறித்து குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள், முன்பு இத்திட்டத்தையே எதிர்த்தவர்கள். இப்போது திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களையும் எதிர்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us