சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு மேலும் அதிகரிக்கும்: காஷ்மீர் துணை நிலை கவர்னர் நம்பிக்கை!
சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு மேலும் அதிகரிக்கும்: காஷ்மீர் துணை நிலை கவர்னர் நம்பிக்கை!
ADDED : செப் 16, 2024 12:58 PM

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலை காட்டிலும் வரும் சட்டசபை தேர்தலில் காஷ்மீரில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்' என துணை நிலை கவர்னர் சின்ஹா தெரிவித்தார்.
அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எந்த கட்சியாக இருந்தாலும் புதிய அரசின் இலக்கு என்ன, அமைதி, வளம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அதிகரிக்க நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்க வேண்டும். அவர்கள் துணை கவர்னரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். காஷ்மீரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைதி மற்றும் செழிப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில அந்தஸ்து
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு, சுப்ரீம் கோர்ட்டின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. முதலில் எல்லை நிர்ணயம், இரண்டாவது சட்டசபை தேர்தல் மற்றும் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா கூறியுள்ளார். துணை நிலை கவர்னரின் அதிகாரம் அளிக்க வேண்டும் என்றால் பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும். பார்லிமென்டில் ஏதும் மசோதா வந்துள்ளதா?
ஓட்டு சதவீதம்!
லோக்சபா தேர்தலின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதிவானதை விட, வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகமாக இருக்கும். அரசியலமைப்பு சட்டத்தின் உதவியுடன் நாடு இயங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இந்த விஷயத்தை லோக்சபாவில் விவாதிக்க வேண்டும். பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும். தேர்தல் கமிஷன் ஒரு விதியை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.