தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ரயிலில் ஹவாலா பணம் ரூ.19.5 லட்சம் பறிமுதல்

ரயிலில் ஹவாலா பணம் ரூ.19.5 லட்சம் பறிமுதல்

ரயிலில் ஹவாலா பணம் ரூ.19.5 லட்சம் பறிமுதல்


UPDATED : நவ 25, 2026 11:44 PM

ADDED : நவ 25, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 11:44 PM ADDED : நவ 25, 2026 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: கோவையில் இருந்து, பாலக்காடு வழியாக கேரளாவிற்கு ரயிலில் ஆவணங்களின்றி கடத்திய 19.5 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வந்த ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அவர் வைத்திருந்த தோள் பையின் ரகசிய அறையில், துணிகளுக்கு இடையே எந்தவித ஆவணங்களும் இன்றி, 19.5 லட்சம் ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர், கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், 59, என்பது தெரியவந்தது. கோவையில் இருந்து ரயிலில் பாலக்காடு வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நிலம்பூருக்கு இப்பணத்தைக் கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us