தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர்கள் பட்டியல் வெளியீடு

முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர்கள் பட்டியல் வெளியீடு

முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர்கள் பட்டியல் வெளியீடு


UPDATED : நவ 25, 2026 11:22 PM

ADDED : நவ 25, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 11:22 PM ADDED : நவ 25, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்டாக் முதுநிலை பல் மருத்துவ படிப்புகளின் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான ஸ்ட்ரே ரவுண்ட் தகுதியான மாணவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியல் சென்டாக் இணையதளமான www.centacpuducherry.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ட்ரே ரவுண்ட் கலந்தாய்விற்கு விருப்பம் தெரிவித்து, பதிவுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பாடப்பிரிவு விருப்பங்களை பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் இடஒதுக்கீட்டிற்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலமும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் லாகின் டாஷ்போர்டில் உள்ள கிரீவன்ஸ் பகுதி மூலமாகவோ அல்லது 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்கள் மூலமாகவோ சென்டாக் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us