தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆட்டோ கட்டணம், ஆன்லைன் வாகன சேவைகளை முறைப்படுத்த கோரிக்கை

ஆட்டோ கட்டணம், ஆன்லைன் வாகன சேவைகளை முறைப்படுத்த கோரிக்கை

ஆட்டோ கட்டணம், ஆன்லைன் வாகன சேவைகளை முறைப்படுத்த கோரிக்கை


UPDATED : நவ 25, 2026 09:16 PM

ADDED : நவ 25, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 09:16 PM ADDED : நவ 25, 2026 09:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நேரு படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தவும், ஆன்லைன் வாகன சேவைகளுக்கு விதிமுறைகளை வகுக்கக் கோரி, நேரு எம்.எல்.ஏ., கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.,) பஸ்கள் மற்றும் தனியார் ஒப்பந்த மின்சார பஸ்களின் டிரைவர்கள், நடத்துநர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரி அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய போக்குவரத்து வாகனமாக ஆட்டோக்கள் உள்ளன. ஆனால், ஆட்டோ போக்குவரத்திற்கு கட்டண நடைமுறைகள் இல்லாததால், குறைந்த துாரத்திற்கு கூட ரூ.200 முதல் ரூ.300 வரை கட்டண வசூலிப்பது சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

இதற்கிடையில், 'ரேபிடோ, ஊபர், ஓலா' போன்ற ஆன்லைன் போக்குவரத்து சேவைகளை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிகளவில் பயன்படுத்த விரும்புகின்றனர். அதற்கான உரிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை போக்குவரத்துத் துறை முறைப்படுத்தாததால், ஆட்டோ டிரைவர்களுக்கும், ஆன்லைன் வாகன டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு சட்டம்– ஒழுங்கு பிரச்னை உருவாகிறது.

எனவே, ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், பிற ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்கி நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆன்லைன் வாடகை வாகனங்கள் மற்றும் பைக் டாக்ஸிகளை உரிய விதிமுறைகளின் கீழ் முறைப்படுத்தி, மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us