தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு

தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு

தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு


UPDATED : நவ 25, 2026 11:08 PM

ADDED : நவ 25, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 11:08 PM ADDED : நவ 25, 2026 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில், 2026–27ம் நிதியாண்டிற்கான எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.90 கோடி மானிய உதவித் தொகையை விடுவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நிதித் துறையின் ஒப்புதலுடன் சார்புச் செயலர் பாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் 2026–27ம் நிதியாண்டு வரவு -செலவுத் திட்ட மதிப்பீட்டின் கீழ், ரூ.90 கோடி நிதி மூன்று தலைப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.54 கோடி, இதர சிறப்புப் பகுதித் திட்டங்களுக்கு ரூ.21 கோடி, பட்டியல் சாதியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள், உள்ளாட்சி நிர்வாகத் துறை இயக்குநரின் எதிர் கையொப்பத்தைப் பெற்று, கணக்குகள் மற்றும் கருவூல இயக்குநரகம் மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இத்தொகையை வரவு வைக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு மட்டுமே இந்நிதியை பயன்படுத்த வேண்டும். மேற்கொள்ளப்படும் பணிகளின் நிதி மற்றும் செயல்பாட்டு முன்னேற்ற விவரங்கள், நிறைவடைந்த பணிகளின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

பட்டியல் சாதியினர் துணைத் திட்டத்தின் கீழ் வரும் நிதி விடுவிப்பு மற்றும் பயன்பாட்டிற்கு, ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us