சென்னப்பட்டணா தொகுதியில் களமிறங்கிய ஹெச்.டி.ரேவண்ணா
சென்னப்பட்டணா தொகுதியில் களமிறங்கிய ஹெச்.டி.ரேவண்ணா
ADDED : அக் 27, 2024 11:06 PM

ராம்நகர்: 'ஹைவோல்டேஜ்' தொகுதியான சென்னப்பட்டணா இடைத்தேர்தலில், கூட்டணிக் கட்சி வேட்பாளர் நிகில் குமாரசாமி, காங்கிரஸ் வேட்பாளர் யோகேஸ்வர் ஆகியோரை எதிர்த்து, ஹெச்.டி.ரேவண்ணா களமிறங்கி உள்ளார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சென்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை, குமாரசாமி ராஜினாமா செய்தார். இந்த தொகுதி உட்பட ஷிகாவி, சண்டூர் தொகுதிகளுக்கு நவம்பர் 13ல், இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
சென்னப்பட்டணா தொகுதி மத்திய அமைச்சர் குமாரசாமி, துணை முதல்வர் சிவகுமாரின் கவுரவ பிரச்னையாக உள்ளது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, உறுதிபூண்டுள்ளனர்.
கூட்டணி சார்பில் நிகில் குமாரசாமி, காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களை எதிர்த்து ஹெச்.டி.ரேவண்ணா களமிறங்கியுள்ளார். வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இவர் ம.ஜ.த., தலைவர் ரேவண்ணா அல்ல. ஹாசன், சென்னராயபட்டணாவின் கோடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்.
பூர்வாஞ்சல் மஹா பஞ்சாயத் கட்சி சார்பில், சென்னப்பட்டணா தொகுதியில் களமிறங்கி உள்ளார்.