ADDED : ஜன 09, 2025 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தர பிரதேசம், பீகார் மக்களை அரவிந்த் கெஜ்ரிவால் அவமதித்ததார். அவர்களை போலி வாக்காளர்கள் என்றார்.
தேர்தல் ஆணையத்தை ஆம் ஆத்மி குழுவினர் பார்வையிட்ட பிறகு 'எக்ஸ்-' சமூகவலைதள பக்கத்தில் கெஜ்ரிவாலின் கருத்துகளின் இரண்டு வீடியோ கிளிப்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக தன் பெரும் ஊழலால் டில்லியைக் கொள்ளையடித்து, நகரத்திற்கு பேரழிவாக மாறிய பிறகு தோல்வியடைவோம் என்ற அச்சத்தில், அரவிந்த் கேஜ்ரிவால் விரக்தியில் உத்தர பிரதேசம், பீகார் சகோதர சகோதரிகளுக்கு எதிராக ஆதாரமற்ற கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவரை அதிகாரத்திலிருந்து துாக்கி எறிவதன் மூலம் டில்லி மக்கள் அவருக்கு நிச்சயமாக பதிலளிப்பார்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

