ADDED : ஏப் 03, 2024 11:42 PM

போரிரால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்கள் 22,500 பேரை மீட்டவர் மோடி. இதற்காக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேசி நடவடிக்கை எடுத்தார். இதை, வேறு எந்த வொரு உலக தலைவராலும் செய்ய முடியாது.
ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,
வாரிசு கட்சிகளின் கூட்டணி
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி, வாரிசு கட்சிகளின் கூட்டணியாக உள்ளது. அந்த கூட்டணியைச் சேர்ந்த பாதி தலைவர்கள் ஜெயிலிலும், பாதி தலைவர்கள் பெயிலிலும் உள்ளனர். ஊழலை காப்பதற்காக அவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,
சொல்வது ஒன்று; செய்வது ஒன்று!
பிரதமர் மோடி சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக பேசி வரும் அவர், பீஹாரில் தன் முதல் பொதுக் கூட்டத்தில் அதே வாரிசு வேட்பாளர் ஒருவருக்காக ஓட்டு கேட்கிறார். மக்கள் வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்

