ADDED : ஜன 29, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயபுரா: பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி, இதய வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விஜயபுரா தொகுதி பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி, லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருகிறார். தனக்கு சீட் உறுதி செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் நேற்று மதியம், விஜயபுராவில் இருந்து, பாகல்கோட் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இதய வலி ஏற்பட்டதால், உடனடியாக பாகல்கோட்டின், குமாரேஸ்வரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.