ADDED : செப் 04, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம் : நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கேரள மாநிலம் களை கட்டியுள்ளது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன்படி திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

