ADDED : பிப் 05, 2024 01:50 AM
மூணாறு,: இடுக்கி மாவட்டத்தில் ஜனவரியில் சராசரி அளவை விட மழை பல மடங்கு அதிகமாக பெய்தது.
கேரளாவில் கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழை குறைந்த நிலையில் வட கிழக்கு பருவ மழை பல மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பதிவானது. அதேபோல் ஜனவரியிலும் மழை அதிகமாக பெய்தது. அம்மாதம் சராசரி மழை 7.4 மி.மீ., பெய்வது இயல்பு. இந்தாண்டு ஜனவரியில் 58.8 மி.மீ., பதிவானது.
அதேபோல் இடுக்கி மாவட்டத்தில் ஜனவரியில் சராசரி அளவை விட மழை பல மடங்கு அதிகரித்தது.
மாவட்டத்தில் சராசரி 9.5 மி.மீ. மழை பெய்யும். இந்தாண்டு ஜனவரியில் 93.1 மி.மீ.. பெய்துள்ளது.
மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு அடுத்து இடுக்கியில் மழை கூடுதலாக பெய்தது.
மாவட்டத்தில் கடந்தாண்டு கோடை மழை 27 சதவீதம், பருவ மழை 54 சதவீதம் குறைவாக பதிவானது.
அதே சமயம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழை 18 சதவீதம் அதிகமாக பெய்தது.
இதற்கு முன் மாவட்டத்தில் 2020 ஜனவரியில் சராசரி அளவை விட கூடுதலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

