கேரளாவில் பலத்த மழை; சபரிமலை வருவதை தவிர்க்க பக்தர்களுக்கு வேண்டுகோள்
கேரளாவில் பலத்த மழை; சபரிமலை வருவதை தவிர்க்க பக்தர்களுக்கு வேண்டுகோள்
ADDED : ஆக 01, 2026 06:19 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்தது.
கேரளாவில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்கிறது. சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்மழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பாலத்தை கடந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பாதையில் அமைந்துள்ள ரான்னி பகுதியையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் சபரிமலை வருவதை தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆவணி மாதத்தின் முதல் 5 நாட்களும், அதன்பின் திருவோணத்திற்கும் கோயில் நடை திறக்கப்படும் என்பதால் அந்த நாட்களை பக்தர்கள் தேர்வு செய்து வரலாம் என தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.
