ADDED : ஜன 01, 2025 12:45 AM

ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசியதாக, மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா மீது பதிவான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளால், வாக்காளர்களை ஏமாற்றவில்லை என்று கூறி, வீட்டுவசதி அமைச்சர் ஜமின் அகமதுகானுக்கு எதிரான தேர்தல் தகராறு மனு தள்ளுபடி.
திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்டதாக, சிவபிரசாத், 29 என்பவர் மீதான வழக்கு தள்ளுபடி.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை தரக்குறைவாக பேசியதாக, பா.ஜ., - -எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீதான வழக்கு ரத்து.
ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மீதான வழக்கு ரத்து.
ஹாவேரி விவசாயி தற்கொலை குறித்து தவறான தகவல் பரப்பியதாக, பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா மீதான வழக்கு ரத்து.
விசாரணை அமைப்புகள் மூலம் பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி, தேர்தல் பத்திர நிதியாக 8,000 கோடி ரூபாய் பறித்ததாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ., தலைவர் நட்டா உட்பட 4 பேர் மீது பதிவான வழக்கு ரத்து.