டில்லி மாநகராட்சி கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
/
டில்லி மாநகராட்சி கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
டில்லி மாநகராட்சி கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
டில்லி மாநகராட்சி கமிஷனருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : செப் 18, 2024 09:44 PM
ADDED : செப் 18, 2024 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நீதிமன்ற உத்தரவை மீறியதற்காகவும், மரங்களை சுற்றிய கான்கிரீட்டை அகற்ற நடவடிக்கை எடுக்காததற்காகவும் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, வடமேற்கு மாவட்ட எம்.சி.டி., கமிஷனர், துணை வனப் பாதுகாவலர் ஆகியோருக்கு டில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பழைய ராஜேந்தர் நகரில் ஒரு ஆலமரத்தைச் சுற்றியிருந்த கான்கிரீட் தளம் குறித்து டில்லி மாநகராட்சிக்கும் வனத்துறையின் முதன்மை தலைமைப் பாதுகாவலருக்கும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ஏறக்குறைய 60 ஆண்டு பழமையான ஆலமரத்தைச்சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதால், அதன் வேர் பலமிழந்து, சாய்ந்து வருவதாகவும் கான்கிரீட் தளத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடக்கோரியும் மனுதாரர் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மனுவை நீதிபதி ஜஸ்மீத் சிங் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் மேற்கண்ட துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கான்கிரீட் தளத்தை மேம்படுத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதை கடுமையாக கண்டித்த உயர் நீதிமன்றம், டில்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மரங்களின் நிலை குறித்து கவலை தெரிவித்தது. அத்துடன் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியற்கான தெளிவான நிலை இருப்பதாக நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறியதற்காகவும், மரங்களை சுற்றிய கான்கிரீட்டை அகற்ற நடவடிக்கை எடுக்காததற்காகவும் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி, வடமேற்கு மாவட்ட எம்.சி.டி., கமிஷனர், துணை வனப் பாதுகாவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ஜஸ்மீத் சிங் உத்தரவிட்டார்.