ADDED : அக் 31, 2025 02:08 AM
புதுடில்லி:  டில்லி திஹார் சிறையில் பணம் பறித்த அதிகாரிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க டில்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திஹார் சிறையில் நடக்கும் முறைகேடுகள் நடப்பதாகவும், கைதிகளை மிரட்டி சிறை அதிகாரிகள் பணம் பறிப்பதாகவும் தாக்கல் செய்யபட்ட மனு,
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய உள்துறை தலைமைச் செயலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஊழல் தடுப்புத் துறையுடன் இணைந்து இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக' கூறினார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கைதிகளிடம் பணம் பறித்த அதிகாரிகள் மீது விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது தொடர்பாகவும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

