உயரப் பறக்குது வெங்காயம்; விலையை கேட்டாலே கண்ணீர் வரும்!
உயரப் பறக்குது வெங்காயம்; விலையை கேட்டாலே கண்ணீர் வரும்!
ADDED : நவ 09, 2024 04:45 PM

புதுடில்லி: நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விலை உயர்வு குறித்து டில்லி காய்கறி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், வெங்காய விலை கிலோவுக்கு ரூ.60லிருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
மும்பை வியாபாரி கூறுகையில், பணவீக்கத்தால், வெங்காய விலையும் கூடிவிட்டது. கிலோவுக்கு, 60 ரூபாயிலிருந்து ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. ஆனால், மற்ற காய்கறிகள் விலை நிலையாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் வாங்கிச்செல்கிறார்கள் என்றார்.
டில்லியில் இல்லத்தரசி ஒருவர் கூறுகையில், வெங்காயம் உணவில் சேர்த்து பழக்கமாகி விட்டதால் நாங்கள் வாங்க வேண்டியது கட்டாயமாகிறது. நான் ஒரு கிலோ ரூ.70 க்கு வாங்கினேன். விலை அதிகமாக இருக்கிறது என்றார்.
மும்பையில் வாடிக்கையாக வாங்கும் டாக்டர் ஒருவர் கூறுகையில், வெங்காயத்தோடு பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கும். நான் 5 கிலோ வெங்காயம் ரூ.360க்கு வாங்கி உள்ளேன்.
காய்கறிகள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வால் மற்ற காய்கறி விலையும் கூடியிருப்பதாக, வியாபாரிகள் கூறுகின்றனர்.
வரத்து குறைவால் தமிழகத்தில் விலை உயர்வு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் குறைந்தபட்ச விலை 40 ரூபாய் ஆகவும் அதிகபட்ச விலை 75 ரூபாய் ஆகும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலைகள்(1 கிலோ)
தக்காளி ரூ.23 லிருந்து ரூ.30 ஆகவும்
உருளைகிழங்கு ரூ.28 லிருந்து ரூ.52
பெரிய வெங்காயம் ரூ.40 லிருந்து ரூ.75
கத்தரிக்காய் ரூ.10 லிருந்து ரூ.25
முட்டைகோஸ் ரூ.15 லிருந்து ரூ.20
பீன்ஸ் ரூ.30 லிருந்து ரூ.40
அவரைக்காய் ரூ.25 லிருந்து ரூ.45
கேரட் ரூ.50 லிருந்து ரூ.60
முள்ளங்கி ரூ.20 லிருந்து ரூ.25
வெண்டைக்காய் ரூ.10 லிருந்து ரூ.25
முருங்கை ரூ.10 லிருந்து ரூ.40
பீட்ரூட் ரூ.30 லிருந்து ரூ.50
சின்ன வெங்காயம் ரூ.30 லிருந்து ரூ.70 ஆகவும்
காலிபிளவர் ரூ.15 லிருந்து ரூ.20 ஆகவும்
தேங்காய் ரூ.25 லிருந்து ரூ.35 ஆகவும்
விலை உயர்ந்துள்ளது.