ஹிமாச்சலில் கொட்டி தீர்க்கும் மழை ரூ.3.52 லட்சம் கோடி மதிப்பு சொத்துகள் சேதம்
ஹிமாச்சலில் கொட்டி தீர்க்கும் மழை ரூ.3.52 லட்சம் கோடி மதிப்பு சொத்துகள் சேதம்
UPDATED : செப் 03, 2025 11:23 PM
ADDED : செப் 03, 2025 09:50 PM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்க்கும் மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 341ஐ தாண்டி உள்ளது. மேலும் இதனால் ரூ.3,52,541 கோடி மதிப்பு சொத்துகள் சேதம் அடைந்துள்ளன.
ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படைய அதிகாரிகள் கூறியதாவது: மாநிலத்தில் பெய்து வரும் பருவமழைக்கு 341 பேர் உயிரிழந்தள்ளனர்.அதில் 182 பேர் மழை தொடர்புடைய நிகழ்வுகளாலும் 23 பேர் நிலச்சரிவினாலும்9 பேர் காட்டாற்று வெள்ளத்தினாலும் 17 பேர் மேகவெடிப்பினாலும்33 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் 14 பேர் மின்சாரம் தாக்கியும் 14 பேர் நீர்நிலைகளில் விழுந்தும்40 பேர் பருவநிலை தொடர்பான சம்பவங்களினாலும்159 பேர் சாலை விபத்துகளிலும் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக மாண்டியில் 29 பேரும், காங்ராவில் 21 பேரும், மணாலியில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகள் பருவமழையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.மேலும் இந்த பருவமழை காரணமாக 389 பேர் காயமடைந்துள்ளனர்.41 பேரை காணவில்லை. 27,667 விலங்குகள், 25,755 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
387 வீடுகள் முழுமையாகவும், 530 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. 4000 ஹெக்டேர் பரப்பு விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
பொதுச் சொத்துகள் சேதம்பொதுப்பணி கட்டமைப்புகள், ஜல்சக்தித்துறை சொத்துகள், மின்துறை சார்ந்த சொத்துகள் என ரூ.ரூ.3,52,541 கோடி கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
முக்கியமான சாலைகள், பாலங்கள், நீர் திட்டங்களை மறுசீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டாலும் தொடர்ந்து பெய்து வரும் மழை, நிலச்சரிவு ஆகியன சவாலாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.