'மோதல் நிறைந்த உலகில் ஹிந்து மதம் தேவை': மோகன் பகவத்
'மோதல் நிறைந்த உலகில் ஹிந்து மதம் தேவை': மோகன் பகவத்
ADDED : ஆக 07, 2025 03:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் மஹாராஷ்டிராவின் நாக்பூரில் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று பேசியதாவது:
மோதல்கள் நிறைந்த இன்றைய உலகுக்கு ஹிந்து மதம் தேவை. ஏனெனில் அது பன்முகத்தன்மையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, நிர்வகிப்பது என்பதை கற்பிக்கிறது. உலகம் முழுதுக்கும் இந்த மதம் தேவை.
பன்முகத்தன்மையை நிர்வகித்து, எவ்வாறு வாழ்வது என உலகத்துக்கு தெரியாததால் தான் பல மோதல்கள் நடக்கின்றன. இந்தியர்களை பொறுத்தவரை மதம் என்பது உண்மையை தவிர வேறில்லை.
இந்த மதம் ஒற்றுமையை வலியுறுத்துவதுடன் பன்முகத்தன்மையையும் ஏற்றுக்கொள்கிறது. ஹிந்து மதம் இயற்கையின் மதம்; இது உலகளாவிய நம்பிக்கை; மனிதகுலத்தின் மதம். ஒவ்வொரு இதயமும் இந்த மதத்தால் விழித்தெழ வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.