ADDED : ஜூன் 03, 2025 03:18 AM

மத்தியில் பல ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுத்ததுஇல்லை; அந்நாட்டை பாதுகாப்பதிலேயே அக்கட்சி கவனம் செலுத்தியது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.
பிரஹலாத் ஜோஷி
மத்திய அமைச்சர், பா.ஜ.,
சாதித்து காட்டுவோம்!
வரும் 2047ம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10 சதவீத பங்களிப்பை தெலுங்கானா வழங்கும் என, நம்புகிறோம். மேலும், 3 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்; அதை சாதித்துக் காட்டுவோம்.
ரேவந்த் ரெட்டி
தெலுங்கானா முதல்வர், காங்.,
தார்மீக பொறுப்பு!
காஷ்மீர் பண்டிட் பிரச்னை அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கு திரும்பும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை வழங்குவதை உறுதி செய்வது தார்மீக கடமை மற்றும் சமூகப் பொறுப்பு. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.
மெஹபூபா முப்தி
தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி