எச்.கே.பாட்டீல் முதல்வராவார் இம்மடி ராமேஸ்வர சுவாமி கருத்து
எச்.கே.பாட்டீல் முதல்வராவார் இம்மடி ராமேஸ்வர சுவாமி கருத்து
ADDED : பிப் 04, 2025 06:50 AM

கதக்: ''அமைச்சர் எச்.கே.பாட்டீலுக்கு, முதல்வர் ஆகும் யோகம் உள்ளது, என இம்மடி சித்த ராமேஸ்வர சுவாமிகள் தெரிவித்தார்.
கதக் நகரில், சித்தராமேஸ்வர ஜெயந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் பங்கேற்றார்.
இதில் இம்மடி சித்த ராமேஸ்வர சுவாமிகள் பேசியதாவது:
அமைச்சர் எச்.கே.பாட்டீலுக்கு, அமைச்சராகும் யோகம் உள்ளது. இதற்கு முன்பே இரண்டு, மூன்று முறை முதல்வராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆகவில்லை. ஆனால் அவர் பதவிக்கு வருவார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பின், முதல்வர் பதவிக்கு எச்.கே.பாட்டீலின் பெயரே, முன்னணியில் இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால், முதல்வராக முடியவில்லை. தாமதமானாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலத்தில் ஏற்கனவே முதல்வர் மாற்றம் குறித்து, காங்கிரசில் சர்ச்சை நடக்கிறது. துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, பரமேஸ்வர் என, சிலர் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளனர். அவ்வப்போது கருத்து தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நிகழ்ச்சி மேடையிலேயே, எச்.கே.பாட்டீலுக்கு முதல்வராகும் யோகம் உள்ளதாக கூறி, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

