தேர்தலை நடத்துங்க...! பாதுகாப்பு படை பலத்தை நிரூபியுங்க..!: உமர் அப்துல்லா சவால்
தேர்தலை நடத்துங்க...! பாதுகாப்பு படை பலத்தை நிரூபியுங்க..!: உமர் அப்துல்லா சவால்
ADDED : ஜூலை 11, 2024 04:12 PM

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்தி, பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் பலத்தை நிரூபிக்க வேண்டும்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யூனியன் பிரதேசங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்தி, பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் பலத்தை நிரூபிக்க வேண்டும். உங்களுக்கு தைரியம் இல்லை. பயமாக இருந்தால், தேர்தலை நீங்கள் நடத்த வேண்டாம். ஆட்சியில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் தைரியம் இருந்தால், பயங்கரவாத சக்திகளுக்கு முன் ஏன் தலைவணங்க வேண்டும்.
நீட் தேர்வு
இங்கு சரியான நேரத்தில் தேர்தல் நடத்தினால், ஜம்மு காஷ்மீர் மக்கள் அவர்களுக்கான அரசை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்த விவகாரத்தில் விசாரணை மூலமாகவோ, நீதிமன்றம் மூலமாகவோ விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.