ADDED : மார் 25, 2024 08:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தி: உத்தர பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலில் ஹோலி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
அயோத்தி ராமர் கோயில் கடந்த ஜன. 22-ம் தேதி திறந்து வைக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகளை பிரதமர் மோடி நடத்தினார்.
இந்நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி இன்று அயோத்தி ராமர் கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். கோயில் கருவறையில் பால ராமருக்கு வண்ண பொடிகளை பூசி சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு. பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஒருவருக்கொருவர் தங்கள் மீது வண்ணப்பொடியை வீசி ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். நாளையும் கொண்டாட்டம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி மாவட்ட கலெக்டர் நிதிஷ் குமார், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.

