மங்களூரில் அமைதி சூழ்நிலை இல்லை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
மங்களூரில் அமைதி சூழ்நிலை இல்லை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
ADDED : பிப் 17, 2024 11:36 PM

மங்களூரு ': ''மங்களூரு நகரம் முன்பு அமைதியாக இருந்தது. தற்போது, முன்பு இருந்ததைப் போன்று, அமைதி சூழ்நிலை இல்லை,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று தட்சிண கன்னடாவின் மங்களூருக்கு வந்தார். இங்கு அவர் கூறியதாவது:
மங்களூரு நகரம் முன்பு அமைதியாக இருந்தது. தற்போது, அமைதி சூழ்நிலை இல்லை. சட்டசபை தேர்தலின்போது மங்களூருக்கு வந்திருந்தேன். 100 பேரை தொடர்பு கொண்டு கலந்துரையாடினேன். அமைதியான சூழ்நிலை இல்லை என்றும், அமைதியான வாழ்க்கை வாழ நினைக்கிறோம் என்று மக்களும் கூறினர்.
எங்கள் பிள்ளைகள் ஊர் விட்டு, வேறு ஊர்களுக்குச் செல்கின்றனர். மங்களூரில் நிலவரம் சரியில்லாததால், வேறு நகரங்களுக்கு சென்று படிக்கின்றனர் என்று வேதனையுடன் கூறினர்.
ஒரு மதத்தை திணிக்கக் கூடாது; அமைதி நிலையுடன் இருக்க வேண்டும். ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் விஷ விதை விதிக்கக் கூடாது.
தேவைப்படுவோருக்கு நிதி வழங்கப்படும். முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதால், பட்ஜெட்டில் சற்று கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது?
இவ்வாறு அவர்கூறினார்.