தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் கவனம்; உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் கவனம்; உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் கவனம்; உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை


ADDED : நவ 23, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 04:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயங்கி வருகிறது. இதன் கீழ் செயல்படும் தேசிய சைபர் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவானது, வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது;

வாட்ஸ் அப்பில் அலுவலகம் சார்ந்த அல்லது முக்கியமான பணிகளை செய்வதை பயனாளிகள் தவிர்க்க வேண்டும். ஒரு அரசு நிறுவனம், நிதி மேலாண்மை, ரகசிய தகவல்கள், மற்ற முக்கியமான விவரங்களை பரிமாறிக் கொள்ள, கம்யூட்டர்களில் வாட்ஸ் அப் வெப்பை (Whats App Web) பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

பயனாளிகள் வாட்ஸ் அப் வெப்பை பயன்படுத்தும் போது குறிப்பாக அலுவலகங்களில் பலரும் பயன்படுத்தும் கம்யூட்டர்கள், பொது இடங்களில் பயன்பாட்டில் இருக்கும் கம்யூட்டர்கள், மற்றவர்கள் மிக எளிதில் அணுகக் கூடிய சாதனங்களை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் வெப் சில நேரங்களில் தவறாக பயன்படுத்தப்படலாம். அதன் மூலம் ஒருவர் வாட்ஸ் அப் கணக்கை மற்றவர்கள் அனுமதியின்றி கையாளக்கூடும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப் வெப் கணக்கில், ஏற்கனவே உள்நுழைந்த அமர்வை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பயனர்களின் கணக்குகளில் அத்துமீறி நுழைய முடியும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us