டில்லியில் 7 குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமையாளர் கைது
டில்லியில் 7 குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமையாளர் கைது
ADDED : மே 26, 2024 05:47 PM

புதுடில்லி: டில்லி விவேக் விஹார் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
டில்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. அதில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவிலும், ஒரு குழந்தை வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகிறது. 16 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதும்,அங்கிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அந்த மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் நவீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் டில்லியில் பல இடங்களில் மருத்துவமனை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.