ADDED : பிப் 17, 2024 04:44 AM
வீட்டு வசதி
l மாநிலத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வழங்க, மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இந்த நிதி ஆண்டில் மேலும் மூன்று லட்சம் வீடுகளை கட்டி முடிக்க, இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
l பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், குடிசை மாற்று வாரியம் 1,18,359 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை வாங்க, 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்காக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். மீதம் ஒரு லட்சம் ரூபாயை பயனாளிகள் செலுத்த வேண்டும். 48,796 வீடுகள் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. பணிகள் முடிந்ததும் அந்த வீடுகள் குடிசைவாசிகளுக்கு வழங்கப்படும்.
l கர்நாடகா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. விதிகளை மீறி செயல்பட்ட, ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கடந்த நிதி ஆண்டில் 40 கோடி ரூபாய், அபராதம் விதிக்கப்பட்டது. வரும் நாட்களில் கர்நாடகா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை பலப்படுத்துவோம்.